இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்குமார் டோவல் இன்று இலங்கைக்கு திடீர் விஜயம்.

4 months ago


இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்குமார் டோவல் இன்று வியாழக்கிழமை (29) இலங்கைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அஜித் யகுமார் டோவல் இந்தியாவிற்கான முன்னாள் இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவை சந்தித்துள்ளார்.

இதன்போது இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் உத்தேச திட்டங்கள் அடங்கிய அறிக்கையை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் வழங்கியுள்ளார்.

வீதி, ரயில் மார்க்கம், மின்சாரம் மற்றும் எரிபொருள் ஆகிய பிரிவுகளின் கீழ் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையே நேரடி தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அண்மைய பதிவுகள்