காசா போர் நிறுத்தத்தில் விடுவிக்க இருந்த 33 இஸ்ரேலிய பணயக் கைதிகளில் 8 பேர் உயிரிழந்தனர்
2 months ago

காசா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கமைய முதல் கட்டமாக விடுவிக்கப்படவிருந்த 33 இஸ்ரேலிய பணயக் கைதிகளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
பணயக் கைதிகள் தொடர்பான ஹமாஸின் பட்டியலை மேற்கோள்காட்டி இஸ்ரேல் அரசாங்க ஊடக பேச்சாளர் டேவிட் மென்சர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஏனைய 25 பேர் உயிருடன் இருக்கின்றனர் என ஹமாஸ் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹமாஸிடமிருந்து பணயக் கைதிகளின் தகவல்களைப் பெற்ற இஸ்ரேல், அவர்களின் நிலைமை குறித்து குடும்பங்களுக்கு அறிவித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், முதல் கட்டமாக விடுவிக்கப்படவிருந்த பணயக் கைதிகளில் ஒரு தொகுதியினர் நாளையும் மற்றுமொரு தொகுதியினர் எதிர்வரும் சனிக்கிழமையும் விடுவிக்கப்படவுள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
