ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முதலில் சகல தரப்பினரும் ஓரணியில் திரள வேண்டும். - திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

4 months ago


ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முதலில் சகல தரப்பினரும் ஓரணியில் திரள வேண்டும். ஒத்த கருத் துள்ளவர்களை இணைக்கும் பணியை திராவிடர் கழகம் செய்யும் என்று தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியும் திராவிடர் கழகத் தலைவருமான கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

அத்துடன், வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் போட்டியிடுவதையும் அவர் வரவேற்றுள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்

மீனவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண இரு நாடுகளும் பேச்சுகளை நடத்த வேண்டும். இரு நாடுகளின் அரசாங்கங்களும் பேசுவதைவிட இரு நாடுகளின் மீனவர்களும் பேசுவதே பொருத்தமானது. இரு தரப்பு மீனவர்களும் தமக்குள் பேசி விட்டுக்கொடுப்புகளை செய்து இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணமுடி யும்”.

வரும், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் போட்டியிடுவது “நல்ல விடயம்”, என்று கூறி வரவேற் றார். அத்துடன், "தமிழ் பொதுவேட்பா ளர் ஒருவரை நிறுத்தும்போது எங்களுடைய ஒற்றுமையை பார்த்து பெரும்பான்மை இனத்தவர்கள் பயப்பட வேண்டும். இதன் மூலம் எங்களுடைய செய்தி சொல்லப்பட வேண்டும்”- என்றார்.

அண்மைய பதிவுகள்