வடமாகாண வீதிப் போக்குவரத்து பொலிஸாரின் கடமை நேரத்தில் இறுக்கமாகக் கண்காணிக்கும் பொறிமுறை அறிமுகம்

2 months ago




வடக்கு மாகாண வீதிப் போக்குவரத்து பொலிஸாரை அவர்களின் கடமை நேரத்தில் இறுக்கமாகக் கண்காணிக்கும் பொறிமுறை             அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப திணைக்களத்தின் உதவியுடன், பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் வைத்து இந்தத் திட்டம் நேற்று முன்தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வீதிப் போக்குவரத்து பொலிஸாரின் நகர்வுகளையும் செயல்பாடுகளையும் கண்காணிக்கும் விதமாகவும் சேவையை பரவலாக்கம் செய்யும் வகையிலும் கடமை நேரத் துஷ்பிரயோகங்களை தவிர்க்கும் வகையிலும் இந்தத் திட்டம் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதிக் கண்காணிப்பு பொலிஸாரின் நகர்வுகள் மற்றும் அவர்களின் இட அமைவுகள் என்பவற்றை அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு திரையில் காணக் கூடியவாறு இந்தத் தொழில் நுட்பத் திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்துப் பொலிஸார் ஓர் இடத்திலேயே நீண்டநேரம் தரித்து நிற்கின்றனர் என்றும், அவர்கள் வாகன நெருக்கடி மிகுந்த பகுதிகளில் சேவையில்                    ஈடுபடுவதில்லை எனவும் நீண்டநாட்களாக பொது மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்த முறைப்பாட்டுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.