யாழ்.தொழில் நுட்பக் கல்லூரியில் 18 வயதினை நிறைவு செய்த மாணவர்களுக்கான வாக்காளர்களை அறிவூட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

3 months ago


யாழ் மாவட்ட சுதந்திரமானது, நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ் தொழில் நுட்பக்கல்லூரியில் 18 வயதினை நிறைவு செய்த மாண வர்களுக்கான வாக்காளர்களை அறிவூட்டும் நிகழ்ச்சி இன்று யாழ் கொக்குவில் தொழில் நுட்பக் கல்லூரியில் சரஸ்வதி மண்டபத்தில் மாவட்ட இணைப்பாளர் எஸ்.தினேஸ் தலைமையில் நடைபெற்றது..

இதில் வாக்குச் சாவடியில் வாக்களிக்கும் விதம், ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை தெரிவுசெய்யும் விதம், வாக்களிக்கும் நேரங்கள்,தபால் மூலமாக வாக்குகள் யாழ்ப்பாணத்தில் நிராகரிக்கப்படுகின்றது மற்றும் வாக்காளர் அட்டையின் முக்கியத்துவம், தேர்தல் கண்காணி ப்பாளர்களின் செயற்பாடுகள், ஜனாதிபதி தேர்தலில் சர்வதேச நாடுகளின் அவதானம் தொடர்பாகவும்  தெளிவூட்டப்பட்டன.

இந்த நிகழ்வில் யாழ் தொழில்நுட்ப கல்லூரியின் மேலதிக பணிப்பாளர் கே.சாந்தகுமார், கலந்துகொண்டு இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

இதில் கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.