இரணைமடு நீரை யாழ்ப்பாணத்தில் பங்கிட கொழும்பில் கலந்துரையாடல்

7 months ago

கிளிநொச்சி இரணைமடு நீரை யாழ்ப்பாணத்துக்குப் பங்கிடுவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.

இரணைமடு கமக்கார அமைப்புக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடலில் பங்கு கொண்டனர்.

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

மேற்படி விடயம் தொடர்பாக கடந்த 16.02.2024 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் கேட்டுக்கொள்ளப்பட்டதற்கு அமைவாகவே இக் கலந்துரையாடல் கொழும்பில் இடம்பெற்றது.

இதன்போது இரணைமடு நீர்ப்பங்கீடு தொடர்பான யாழ் மாவட்டம் மற்றும் மாவட்ட மக்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாதவாறு ஒரு தீர்க்கமான முடிவினை எட்டு வதற்கான நடவடிக்கைககளை அமைச்சர் ஜீவன் தொண்டமான் எடுத்துரைத்தார்.