மியன்மாரில் இருந்து இலங்கைக்கு தஞ்சம் கோரி வந்த கர்ப்பிணித் தாய் ஒருவர் குழந்தை பிரசவித்தார்.
மியன்மாரில் இருந்து இலங்கைக்கு தஞ்சம் கோரி வந்த கர்ப்பிணித் தாய் ஒருவர் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் குழந்தை பிரசவித்துள்ளார்.
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பரப்பில் கடந்த டிசெம்பர் மாதம் 19 ஆம் திகதி 115 பயணிகளுடன் மியன்மார் அகதிகள் படகு, கரை ஒதுங்கியிருந்தது.
பின்னர் கப்பல் கரைக்கு வர முடியாத நிலையில் கடற்படையினரின் உதவியுடன் திருகோணமலை கடற்படை தளத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் அவர்கள் திருகோணமலை ஐமாலிய முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு பின்னர் 115 பேரும் முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படை தளம் ஒன்றில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த படகில் 45 சிறுவர்கள், 24 பெண்கள், 46 ஆண்கள் உள்ளடங்கலாக 115 பேர் தஞ்சம் கோரியிருந்தனர்.
அவர்களில் ஒரு கர்ப்பிணித் தாயும் அடங்குவார். குறித்த கர்ப்பிணித் தாய் நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஆண் குழந்தையை பிரசவித்துள்ளார்.