இலங்கையில் நடக்காத உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு 72 கோடி ரூபா செலவு. கொழும்பு ஊடகம் தகவல்

1 month ago



இந்த வருட தொடக்கத்தில் நடைபெறவிருந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு 72 கோடி ரூபா வீண் விரயம் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று சனிக்கிழமை வெளியான அந்த செய்தியில்-

உள்ளூராட்சி சபை தேர்தலுக்காக இதுவரை 72 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டும் பலன் இல்லாமல் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் உள்ளூராட்சி சபை      தேர்தலில் கோரப்பட்டிருந்த வேட்பு மனுக்கள் இரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக புதிய வேட்புமனுக்கள் கோரப்படவுள்ளன.

பழைய வேட்புமனுக்களின் படி கணிசமான அளவு பணிகள் நடைபெற்றுள்ளதாகவும், அதற்காக அச்சிடப்பட்ட அதிகாரபூர்வ வாக்குச் சீட்டு அறிவிப்புக்கள் மற்றும் வாக்குச் சீட்டுக்கள் எதனையும் மறு வேட்புமனு அழைப்பில் பயன்படுத்த முடியாது என்றும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நடைபெறவிருந்த உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான மறு வேட்புமனு அழைப்பில் இதுவரையான செலவீனங்களை திருப்பிக் கொடுக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் மேலும் கூறினார்.

உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு வரை கணிசமான அளவு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், வேட்புமனுக்கள் திரும்பப் பெறப்படும் பட்சத்தில் அனைத்துப் பணிகளும் புதிதாக தொடங்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

உளளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்து புதிய வேட்புமனுவை கோருவதற்கு அமைச்சரவை அண்மையில் தீர்மானித்ததாகவும், ஆனால் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நடைமுறையில் உள்ளதால்            தேர்தல்கள் ஆணைக்குழுவால் இதுவரை பின்பற்றப்பட்ட செயற்பாடுகளை நிறுத்த முடியாது எனவும் உறுப்பினர் தெரிவித்தார்.

இதன்படி, நீதிமன்றத்தின் மற்றுமொரு தீர்ப்பு கிடைக்கும் வரை, முன்னர் கோரப்பட்ட வேட்பு மனுக்களின் படி தேர்தல் நடவடிக்கைகள் தொடரும் எனவும் அவர் மேலும் கூறினார்.

உள்ளூராட்சிச் சபைகளுக்கான  தேர்தலை நடத்துவதற்காக இதுவரை 72 கோடி ரூபாவுக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய பதிவுகள்