சேதமடைந்த வவுனியா மதவாச்சி பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பிப்பதற்கு அமைச்சர் வசந்த சமரசிங்க கண்காணிப்பு விஜயம்

3 months ago



பயன்பாடின்றி சேதமடைந்து வரும் வவுனியா மதவாச்சி பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பிப்பது குறித்து ஆராய்வதற்காக வர்த்தகம், வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

பொருளாதார மத்திய நிலையத்தின் தற்போதைய நிலை மற்றும் அதை மீளக் கட்டியெழுப்புவதற்கான திட்டங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இந்த பொருளாதார மத்திய நிலையத்தை இங்கு ஆரம்பிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து, மதவாச்சி பிரதேச செயலாளர் சந்திரிகா மலவியாராச்சி அமைச்சருக்கு விளக்கமளித்தார்.

இதில் மதவாச்சி பாரளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார நவத்தன்ன அவர்களும் கலந்துகொண்டார்.

அண்மைய பதிவுகள்