காஸாவில் பலஸ்தீனிய மக்களை இஸ்ரேலிய இராணுவம் திட்டமிட்டு கொலை செய்தது என்றும், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட மனிததன்மையற்ற சித்திரவதைகளில் ஈடுபட்டது எனவும் ஐ.நா விசாரணைக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் தொடர்பாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் தலைவர் நவநீதம்பிள்ளை தலைமையில் உயர்மட்டக் குழு விசாரணை மேற்கொண்டது.
அந்தக் குழுவின் விசாரணை அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸாவில் உள்ள பலஸ்தீனியர்களை முற்றாக அழிக்க இஸ்ரேல் முயன்றது. பெண்களை பாலியல் ரீதியில் சித்திரவதை செய்ததுடன், பலஸ்தீனிய ஆண்கள் மற்றும் இளைஞர்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் ஹமாஸ் இயக்கத்தினரும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.