இலங்கையில் சில தமிழ் பாடசாலை க.பொ.த சாதாரண தர பரீட்டை முடிவுகள்

3 months ago


பருத்தித்துறை ஹாட்லியில் 32 மாணவர்களுக்கு 9ஏ சித்தி!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியில் 32 மாணவர்கள் 9 பாடங்களில் விசேட சித்தியான ஏ பெறுபேற்றை பெற்றுள்ளனர். 9 ஏ பெற்றவர்களில் 17 மாணவர்கள் தமிழ் மொழி மூலமும் 15 மாணவர்கள் ஆங்கில மொழி மூலமும் பரீட்சைக்கு              தோற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று 28 மாணவர்கள் 8 ஏ. பெறுபேற்றை பெற்றுள்ளனர். இதில், 20 மாணவர்கள் தமிழ் மொழி மூலமாகவும் 8 மாணவர்கள் ஆங்கில மொழி மூலமாகவும் பரீட்சைக்கு தோற்றியவர்களாவர்.

இந்தப் பாடசாலையில் 154 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி அனைவரும் உயர்தரம் கற்கத் தகுதி பெற்றுள்ளனர் என்பதும் குறிப் பிடத்தக்கது. 

வடமராட்சி இந்து மகளிரில் மூன்று மாணவிகள் 9ஏ சித்தி.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் பருத்தித்துறை வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் மூன்று மாணவிகள் 9ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

இந்தப் பாடசாலையில் உயர்பெறுபேறுகளை பெற்றவர்களின் விவரம் வருமாறு. ஜெ. துர்க்கா, ச. சுவர்த்திகா,               ம.தேனுஜா ஆகியோர் 9ஏ பெறுபேற்றை பெற்றனர்.

சி.துஷிந்தா 8ஏ, பி, ப. கரணவி 8ஏ. சி. ரா.அபிநயா 8 ஏ. எஸ், பா. பிரவீனா 7ஏ. பி. சி. செ. திகழ்கரபி 6ஏ. 3 பி. சி. தீபிகா 6 ஏ.பி. சி. எஸ். ந. சுகர்மிகா 6ஏ, 2 சி. எஸ், க.அனுசியா. 4 பி.        ரா. வானதி 5ஏ. 3பி.சி. ப.காவியா,   ரா. திவ்யா, சி. தனுஷியா 5ஏ, 2பி.     2 சி.பா. சௌமியா 5 4ஏ, பி. 3சி பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.

கொக்குவில் இந்துவில் 7 மாணவர்களுக்கு 9ஏ

பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கொக்குவில் இந்துக் கல்லூரியில் 7 பேர் 9 பாடங்களில் விசேட சித்தியான ஏ பெறுபேற்றை பெற்றுள்ளனர்.

இதேபோன்று 22 மாணவர்கள் 8ஏ பெறுபேற்றையும் 21 மாணவர்கள் 7ஏ பெறுபேற்றையும் 18 மாணவர்கள் 6ஏ பெறுபேற்றையும் 16 மாணவர்கள் 5ஏ பெறுபேற்றையும் பெற்றுள்ளனர். 

நெல்லியடி மத்தியில் 7 மாணவர்களுக்கு 8ஏ 

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் நெல்லியடி மத்திய கல்லூரியில் 7 பேர் 8 பாடங்களில் விசேட சித்தியான ஏ பெறுபேற்றை பெற்றுள்ளனர்.

இதில் இருவர் ஆங்கில மொழி மூலமாக பரீட்சைக்கு                  தோற்றியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று 3 மாணவர்கள் 7ஏ பெறுபேற்றையும் 3 மாணவர்கள் 6ஏ பெறுபேற்றையும்  3 மாணவர்கள் 5 ஏ பெறுபேற்றையும் பெற்றுள்ளனர்.

அத்துடன், இந்தப் பாடசாலையில் 121மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி 100 பேர் சித்தியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. 

வடமராட்சி கிழக்கில் இரு மாணவருக்கு 9ஏ

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் வடமராட்சி கிழக்கு மாணவர்கள் இருவர் 9 ஏ பெறுபேற்றைப் பெற்றுள்ளனர்.

ஆழியவளை சி. சி. த.த.க    பாடசாலையில் ஒருவரும் உடுத்துறை மகா வித்தியாலயத்தில் ஒருவருமாக இருவர் 9ஏ சித்தியை பெற்றுள்ளனர்.

பருத்தித்துறை மெதடிஸில் 26 மாணவிகள் 9ஏ சித்தி!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் பருத்தித்துறை மெதடிஸ் உயர்தர பெண்கள் பாடசாலையில் 26 மாணவிகள் 9 பாடங்களில் விசேட சித்தியான ஏ பெறுபேற்றை பெற்றுள்ளனர்.

இதேபோன்று 19 மாணவிகள் 8ஏ, பி பெறுபேற்றையும் 08 மாணவிகள் 8ஏ, சி பெறுபேற்றையும் 12 மாணவிகள் 7ஏ 2பி பெறுபேற்றையும் 5 மாணவிகள் 7ஏ, பி, சி பெறுபேற்றையும் பெற்றுள்ளனர். 

யாழ். மத்திய கல்லூரியில் இருவருக்கு 9ஏ பெறுபேறு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவர்கள் இருவர் 9 பாடங்களில் ஏ பெறுபேற்றை பெற்றுள்ளனர்.

முஹமட் சிபான், கோ.ஆகாஷ் ஆகி யோரே 9ஏ பெறுபேற்றை பெற்றனர்.

ம. கஜப்பிரியன் 8ஏ, பி. ஜீ. ஜதுமிதன் 8ஏ. சி. மு. கஜரதன் 7ஏ. பி. சி.             சி. ஆகாஷ் 7ஏ. பி. சி. கி. ஜான்சன் வசந்தன் 7ஏ, பி. சி. பி,                      ஜூட் ஜெனிஸ்ரன் 7ஏ, பி. சி. ஹா. நிலக்ஷன் 6ஏ. 2பி.சி.                      மெள. விதுர்ஜியன் 6ஏ. 2பி, சி.          சு. விபூசன் 6ஏ.பி.2சி. ர. தஜூசன் 5ஏ, 2சி. 2எஸ்.கு.துஷான் 5ஏ, 3பி, சி பெறுபேறு யகளை பெற்றுள்ளனர். 

உடுவில் மகளிரில் 6 மாணவிகளுக்கு 9ஏ

க.பொ. த சாதாரண தரப் பரீட்சையில் யாழ். உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் ஆறு பேர் 9ஏ பெறுபேற்றை பெற்றுள்ளனர்.

அகநிலா சதீஸ்குமார், டி.ரோஷினி சிவகுமார், தாருணி மணிவண்ணன், ஜாஸ்மிகா ஆனந்தராஜா, தரண்ஜா கோபிநாத், செலூரி நிரஞ்சர் ஆகியோரே 9ஏ பெறுபேற்றை பெற்றவர்களாவர்.

இதேபோன்று, 7 மாணவிகள் 8 ஏ பெறுபேற்றையும் 9 மாணவிகள் 7ஏ பெறுபேற்றையும் 4 மாணவிகள் 6ஏ பெறுபேற்றையும் 5 மாணவிகள் 5ஏ பெறுபேற்றையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

வவுனியா இறம்பைக்குளம் ம. வி.யில் 25 மாணவர்களுக்கு 9ஏ

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் 25 பேர் 9 பாடங்களில் விசேட சித்தியான ஏ பெறுபேற்றை பெற்றுள்ளனர்.

தொடர்ச்சியாக பாடசாலையின் பெறுபேறுகளில் மாணவர்கள் உயர்வை வெளிப்படுத்தி வரும் நிலையில் தற்போதும்              அதிகளவான மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் விசேட சித்தியை பெற்றுள்ளனர்.

அத்துடன், 16 மாணவர்கள் 8 பாடங்களில் விசேட சித்தியை பெற்றள்ளனர் என்று பாடசாலை யின் அதிபர் தெரிவித்தார்.

கிளிநொச்சி முழங்காவில் ம.வியில் இருவருக்கு 9ஏ பெறுபேறு!

 க. பொ. த. சாதாரண தரப் பரீட்சையில் கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியால யத்தில் இரு மாணவர்கள் 9ஏ பெறுபேற்றை பெற்றுள்ளனர்.

ஜெ. சமர்வாணன், ம. தாருசா       ஆகியோரே 9ஏ பெறுபேற்றை பெற்றனர்.அ. எழிலள், ஆ. ஆதித்ய நிலா, வி. கோபிகா ஆகியோர் 8ஏ, பி. ரா. கோமகள், ச. சாலினி 8ஏ.சி.     பை, லிங்கேஸ்வரன், சி. அலைமகள் 8ஏ.எஸ் சித்தியையும் பெற்றுள்ளனர். க. சங்கவி 7ஏ. 2சி, அ. மதுரிகா, உ.செயல்விழி 6ஏ. 3பி.கு. ஆதுரியா 6ஏ, பி. சி. எஸ்.        க. சங்கவி. தா. விதுர்சாயினி 54ஏ.பி. 2சி, க. பிருந்தன் 5ஏ, 2பி. 2ளஸ்,         இ. சதுர்சன். மேரிசுபாசினி 5ஏ, 3பி. 1எஸ்,மு. தமிழ்க்கீரன் 5ஏ.பி.சி. எஸ், அ. கனிநிலை 5ஏ, 2பி. சி பெறுபேற்றை பெற்றுள்ளனர்.