சீன அரசால் வடக்கு மாகாண மீனவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட பொருத்து வீடு பருத்தித்துறையில் அமைப்பு
1 week ago
சீன அரசால் வடக்கு மாகாண மீனவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட பொருத்து வீடுகளில் ஒன்றே தற்போது பருத்தித்துறையில் அமைக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறையில் மீன்பிடித் திணைக்களத்தின் ஆளுகையில் உள்ள துறைமுகப் பகுதியில் இந்தப் பொருத்து வீடு அமைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கான பொருத்து வீடுகள் தற்போது நாவற்குழிப் பகுதியில் உள்ள யாழ். மாவட்ட செயலக களஞ்சியத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
அந்த வீட்டு மாதிரியை மீனவர்கள் பார்வையிடுவதற்காகவே பருத்தித்துறையில் ஒரு வீடு தற்போது அமைக்கப்பட்டுள்ளது.