தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் விசேட கூட்டத்தில் முக்கிய பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் விசேட கூட்டத்தில் முக்கிய பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி இன்று (26) விசேட கலந்துரையாடலில் ஈடுபட்ட போதே இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தேர்தல் விஞ்ஞாபனத்தை விரைவில் வெளியிடுவது மற்றும் தென்னிலங்கையில் இருந்து வருகின்ற அழைப்புக்களை ஏற்பதா இல்லையா என்பதை ஒருமித்து முடிவெடுப்பது, வடகிழக்கில் தேர்தல் பிரச்சாரங்களை முழு வீச்சில் முன்னெடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்றையதினம் எடுக்கப்பட்ட இந்த தீர்மானங்கள் அனைத்தையும் தேர்தல் காலம் முடியும் வரையில் அரசியல் கட்சிகளும் சிவில் சமூகத்தினரும் கடைப்பிடிக்க வேண்டுமென்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தில் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற வடகிழக்கில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட அதன் பிரதிநிதிகள் சிவில் சமூகத்தினர் என பலரூம் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.