மாவை சேனாதிராஜாவின் மகன் அரியநேத்திரனுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ளார்.

4 months ago


தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் மகன், தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கியிருக்கும் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவாக தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக தீர்மானம் எடுத்துள்ளது.

இந்த நிலையில், தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவினுடைய மகனும், தமிழரசு கட்சியின் இளைஞர் அணி முன்னாள் செயலாளருமான கலையமுதன் இன்றையதினம் தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் அரியனேத்திரனுக்கு ஆதரவு கோரி பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். 

வலி வடக்கின் பல்வேறு கிராமங்களிலும் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீன் ஆகியோருடன் இணைந்து தீவிர பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. 

அண்மைய பதிவுகள்