எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் வெளியிடப்பட் டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் வெளியிடப்பட் டுள்ளது.
வேட்பாளர்கள் சமர்ப்பித்த ஆவணங்களின் பிரகாரம் இந்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, தற்போதைய ஜனாதிபதி யும் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்கவின் மாத வேதனம் 97 ஆயிரத்து 500 ரூபாயாகும். அத்துடன், அவர் 82 ஆயிரத்து 191 ரூபாய் 66 சதம் வேறு கொடுப்பனவு களைப் பெறுகிறார். களனி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் அவரின் மனைவியின் மாதாந்த வேதனம் 5 இலட் சத்து 76 ஆயிரத்து 785 ரூபாய் 50 சதமாகும். அத்துடன் அவர் இரத்தினங்கள் மற்றும் ஆபரணத்துறையில் பணத்தை முதலீடு செய்துள்ளதுடன், அவரிடம் உள்ள ஆபரணங்களின் பெறுமதி 6 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாயாகும். இதேநேரம். ஜனாதிபதியின் மனைவி, அவரின் தாயிடமிருந்து பெற்ற 39 இலட்சம் ரூபாய் பெறுமதியான பல நகைகளை வைத்துள்ளார். குருநாகல் - மல்பொக்கு னாவத்தையில் உள்ள காணி. கொழும்பு -7இல் தற்போது அவர் வசிக்கும் வீடு, நாவல வீதியில் உள்ள அவரது வீடு மற்றும் அதனுடன் தொடர்புடைய காணி அவரின் ரணிலின் சொத்துகளாகும். இதேநேரம், ஜனாதிபதியிடம் உள்ள ஜீப் ரக வாகனம் ஒன்றும் இரண்டு பென்ஸ் ரக கார்களும் உள்ளன. இதே நேரம். 18 இலட்சத்து 50 ஆயி ரம் ரூபாய் கடனையும் அவர் வங்கிகளில் பெற்றுள்ளார் என்று கூறப்பட்டது.
இதேபோன்று, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் மாத வருமானம் சகல கொடுப்பனவுகளுடன் 2 இலட்சத்து 95 ஆயிரத்து 681 ரூபா 14 சதமாகும். தனது மனைவியின் அழகுக் கலை நிலையத்துக்காக அவர் ஒரு கோடியே 37 இலட்சத்து 68 ஆயிரத்து 532 ரூபாய் 75 சதம் முதலீடு செய்துள் ளார். கொழும்பு - சுஹம் பிலியவெடிய பகுதியில் காணி ஒன்றும் அவருக்கு உள்ளது. அத்துடன், 23 இலட்சம் பெறு மதியான நகைகள் மனைவியிடம் உள்ளன. அத்துடன், பென்ஸ் கார் மற்றும் லான்ட் குருஷர், ப்ராடோ ரக வாகனங்கள் உட் பட 5 வாகனங்களை அவர் வைத்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸநாயக்கவின் கொடுப்பனவுடன் கூடிய மாதாந்த வருமானம் இரண்டு இலட்சத்து இரண்டாயிரத்து 571 ரூபாய் 34 சதமாகும். அநுரகுமார திஸாநாயக்கவின் மனைவி தொழில் எதனையும் புரியவில்லை. அவரிடம் சில தங்கநகைகள் உள் ளன. ஒரே ஒரு வாகனத்தை வைத்துள்ளார். அத்துடன், பத்தரமுல்லையில் அவர் வசிக்கும் வீடு அவருக்கு சொந்தமானது என்றும் தெரிவிக்கப்பட்டது.
சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் நாமல் ராஜபக்ஷவின் மாதாந்த வேதனம் 54 ஆயிரத்து 285 ரூபாவாகும். எனினும், அவர் 4 இலட்சம் ரூபாயை மாதாந்தம் ஈட்டுகிறார். அவரின் மனைவி மாதம் ஒரு இலட்சத்து 15 ஆயிரம் ரூபாயை வேதனமாகப் பெறுகிறார். அத்துடன், 20 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ள நாமல் அவற்றின் மூலம் 30 இலட்சம் ரூபாயை மாதாந்தம் வட்டியாகப் பெறுகிறார். தன்னிடம் 88 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளும் மனைவியிடம் 13 கோடியே 80 இலட்சம் பெறுமதியான நகைகளும் உள்ளன. அத்துடன் இரண்டு கார் கள், ஒரு பென்ஸ் ரக கார். ப்ராடோ ரக வாகனம் ஒன்றும் ஒரு டிபெண்டர் ரக வாகனம் ஆகியவை தனக்கு சொந்தமானவை என்று நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.