யாழ்.கீரிமலை ஜனாதிபதி மாளிகையின் பிரதேசத்தையும் சடையம்மா சமாதியுடன் சுவீகரிக்க இரகசிய நகர்வு!

4 months ago


யாழ்.கீரிமலை ஜனாதிபதி மாளிகையின் பிரதேசத்தையும் சடையம்மா சமாதியுடன் சுவீகரிக்க இரகசிய நகர்வு! 

யாழ்ப்பாணம் கீரிமலை ஜனாதிபதி மாளிகைப் பிரதேசத்தை சடையம்மா சமாதியுடன் சுவீகரிக்கும் நோக்கில் இரகசியமான முறையில் நில அளவீடு மேற்கொண்டு வரைபடம் பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தெல் லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கீரிமலையில் பொது மக்களிற்குச் சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையும் அதனை அண்டிய நிலம் முழுவதனையும் நில சுவீகரிப்பிற்கு உட்படுத்தும் முதல் அங்கமாக அப்பகுதியை நிலஅளவைத் திணைக்களத்தின் தலைமைப் பணிமனை அதிகாரிகள் கொழும்பில் இருந்து வருகை தந்து அளவீட்டினை மேற்கொண்டு அதன் வரை படத்தினை தெல்லிப்பளை பிரதேச செயலாளரிடம் தற்போது கையளித்துள்ளனர்.

ஜனாதிபதி மாளிகை உள்ளடங்க ளாக 6 ஏக்கர் நிலம் அளவீடு செய் யப்பட்டு வரைபடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு அப்பகுதி காணிகளின் பெயர் பொன்னுப்புதுக்காடு எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.

நிலத்தின் உரிமையாளர்களைத் தெரியாது என வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அரச காணிகளும் உள்ளடங்குவதாகவும் காணிகளின் எல்லைகள் படை முகாம் எனவும் குறிப்பிடப்பட்டு 2024-08-29 அன்று நில அளவைத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் ஒப்பமிட்டுள்ளார்.

கீரிமலை ஜனாதிபதி மாளிகை தனியார் பல்கலைக்கழகத்திற்கு வழங்க ஏற்கனவே இரகசியமான முறையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட பின்பு சுவீகரிப்பு பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதேநேரம் தையிட்டி விகாரைப் பகுதி இரகசியமாக அளவீடு செய்து வரைபடம் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்