இலங்கையில் சில இடங்களில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவுவதால் ஒரு தேங்காயின் விலை 200 ரூபாவைத் தாண்டி விற்கப்படுகிறது.
இந்த நிலையில் இலங்கை பத்தரமுல்லை தென்னைச் செய்கை சபைக்கு சொந்தமான "கப்துருபாய" கடையில் நேற்று (06) காலை, தேங்காய்களை கொள்வனவு செய்வதற்கு வாடிக்கையாளர்கள் குழுவொன்று நீண்ட வரிசையில் நின்றனர்.