கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளுக்கு விற்கப்பட்ட பெறுமதியான காணிகள் மீண்டும் அதே உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன என்று கரைச்சிப் பிரதேச செயலர் ரி.முகுந்தன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் காலத்தில் அவர்களின் நிர்வாகங்களுக்கு மக்களால் காணிகள் விற்கப்பட்டன.
போர் நிறைவுற்ற பின் காணிகளை மீண்டும் உரிமையாளர்களால் கோரப்பட்டதற்கமைவாக பல பெறுமதியான காணிகள் உரிமை கோரியவர்களுக்கு வழங்கப்பட்டன.
அதேபோல, செஞ்சோலை காணியும் விடுதலைப்புலிகளுக்கு விற்பனை செய்யப்பட்டதே. ஆயினும் அங்கு வளர்ந்த பிள்ளைகள் வீடுகள், உறவுகள் இல்லாமல் அந்தக் காணியிலேயே கொட்டகைகளை அமைத்து வாழ்கின்றனர். உண்மையில் அவர்களின் நிலையும் கவலைக்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.