யாழ்.கோப்பாய் ஆசிரியர் கலாசாலை இந்து மன்றம் நடத்திய வாணி விழாவும் கலாசாலை சிவன் ஆலய மானம்பூ உற்சவமும்
2 months ago
யாழ்.கோப்பாய் ஆசிரியர் கலாசாலை இந்து மன்றம் நடத்திய வாணி விழாவும் கலாசாலை சிவன் ஆலய மானம்பூ உற்சவமும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக யோகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் விஜயதசமி பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
ஆயுத பூஜை, மானம்பு உற்சவம் என்பன இடம்பெற்று அதனைத் தொடர்ந்து சிறார்களுக்கான ஏடு தொடக்கும் நிகழ்வு நடை பெற்றது.
மானம்பு உற்சவத்தை ஆலய பிரதம குரு சிவசிறீ பா. செல்வசேனக் குருக்கள் நடத்தி வைத்தார்.
கலாசாலை அதிபர் ச. லலீசன் சிறார்களுக்கு அட்சர ஆரம்பம் செய்து வைத்தார்.
நிகழ்வில் பிரதம விருந்தினராக கலாசாலையின் பழைய மாணவரும் அதிபர் சேவை உத்தியோகத்தருமான க. கைலைநாதன் கலந்து கொண்டார்.
சிறப்பு நிகழ்வாக விரிவுரையாளர் கவிஞர் வேல்நந்தகுமாரின் நெறியாள்கையில் ஆசிரிய மாணவர்கள் வழங்கிய கல்வியா, செல்வமா, வீரமா என்ற நாடகம் நடைபெற்றது.