யாழ்ப்பாணம் வந்த இந்திய அதிகாரிகள் குழு ஒன்று நேற்று தமிழ்த் தேசிய அரசியல் கட்சி ஒன்றின் தலைவரை சந்தித்து இரகசிய பேச்சில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பலாலி விமான நிலையம் ஊடாக நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் வந்த இந்திய அதிகாரிகள் குழுவே தமிழ்த் தேசிய அரசியல் கட்சி ஒன்றின் தலைவரை இரகசியமாக அவரின் இடத்தில் சந்தித்துவிட்டு திரும்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தத் தமிழ்த் தலைவரிடம் உடனடியாகவே சந்திப்புக்கு அனுமதி பெறப்பட்டு, மூடிய அறைக்குள் சில நிமிடங்கள் இந்த சந்திப்பு இடம்பெற்றதாகவும் இதன் போது, தமிழ் பொதுவேட்பாளர் குறித்து பேசப்பட்டதாகவும் அறிய வருகின்றது