இலங்கையில் ஜனாதிபதி வேட்பாளர் செலவு அறிக்கையைச் சமர்ப்பிக்க தவறிய 5 வேட்பாளர்கள் மீது வழக்கு

3 months ago



செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய 12 ஜனாதிபதி வேட்பாளர்களில் மீதமுள்ள 5 பேர் மீது அடுத்த வாரம் வழக்கு தொடரப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது ஏழு ஜனாதிபதி வேட்பாளர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழு அதிகாரியொருவர் கூறுகையில்,

'செலவு அறிக்கை சமர்ப்பிப்பு முடிந்த அன்றே தபால் மூலம் அறிக்கை அனுப்பப்பட்டதால், ஒரு வேட்பாளர் மீது வழக்கு தொடரப்படாது.

மேலும், செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர் மீது வழக்குத் தொடரப்பட்டால், அந்த வேட்பாளர் மாகாண அல்லது உள்ளூாராட்சிச் சபைத் தேர்தலில் வேட்பாளராக நிற்க முடியாது-என்றார். 

அண்மைய பதிவுகள்