மெக்சிகோவில் செய்த வைர மோதிரம் வாங்கிய கனடாப் பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

5 months ago


மெக்சிகோவில் செய்த வைர மோதிரம் வாங்கிய கனடாப் பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

ஒன்ராரியோ மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மெக்சிகோவில் கொள்வனவு செய்த வைர மோதிரம் போலியானது எனத் தெரியவந்துள்ளது.

இந்த மோதிரத்தைக் குறித்த பெண்ணும் அவரது காதலரும் 4,176 டொலர்களுக்கு கொள்வனவு செய் துள்ளனர்.

எனினும் நாடு திரும்பியதன் பின்னர் இந்த வைர மோதிரத்தின் பெறுமதி வெறும் 50 டொலர்கள் என தெரியவந்துள்ளது.

தாம் ஏமாற்றப்பட்டமை பெரும் வருத்தமளிப்பதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

போலியான முறையில் மெக்சிகோவில் வைர மோதிரம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் மெக்சிகோ வின் கன்குன் பகுதிக்கு விடுமுறைக் காக இவர்கள் இருவரும் சென்றுள்ளனர்.

இதன்போது அங்கிருந்த ஆபரண கடை ஒன்றில் இந்த வைர மோதி ரத்தை கொள்வனவு செய்துள்ளனர்.

நாடு திரும்பியதன் பின்னர் இந்த மோதிரத்தை பரிசோதித்து பார்த்த போது அது போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.

கொள்வனவு செய்யப்பட்ட மோதிரம் பற்றிய விவரங்களை மின்னஞ்சல் வழியாக அனுப்புவதாக கடை உரிமையாளர்கள் உறுதி அளித்த போதிலும் தமக்கு அந்த விவரங்கள் கிடைக்கப் பெறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மோதிரம் றோயல் கனடா வங்கியின் வீசா அட்டை மூலம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. செலுத்திய பணத்தை திரும்பப் பெறுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை வெற்றியளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாடுகளில் ஆபரணங்கள் கொள்வனவு செய்யும் போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது சவால் மிக்கது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கனடாவிற்கு வெளியே பெறுமதி யான ஆபரணங்கள் கொள்வனவு செய்வது சில ஆபத்துக்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய பதிவுகள்