இந்திய அதிகாரிகளுக்கு அதானி குழுமம் இலஞ்சம் கொடுத்ததான வழக்கில் கௌதம் அதானிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் பிடியாணை

1 month ago




தமிழகம், ஆந்திரா, ஒடிசா, ஜம்மு - காஷ்மீர், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு அதானி குழுமம் 2,100 கோடி ரூபாய் இலஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கௌதம் அதானிக்கு எதிராக அமெரிக்காவின் நியூயோர்க் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

அதானி குழும நிறுவனங்களின் தலைவர் கௌதம் அதானி, உலகப் பணக்காரர் பட்டியலில் 17ஆவது இடத்திலும், இந்திய அளவில் 2ஆவது இடத்திலும் உள்ளார்.

இந்த நிலையில், கௌதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி, முன்னாள் தலைமை அதிகாரி வினித் ஜெயின் உள்ளிட்ட 7பேர் மீது இலஞ்சம் மற்றும் கடன் பத்திர மோசடி தொடர்பான தனித்தனி வழக்குகளில் அமெரிக்காவின் நியூயோர்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.