யாழ்.வட்டுக்கோட்டையில் கிணற்றில் தவறி விழுந்து 3 வயது குழந்தையும் தாய்மாமனும் உயிரிழந்தனர்

யாழ்.வட்டுக்கோட்டையில் கிணற்றில் தவறி விழுந்து 3 வயது குழந்தையும் தாய்மாமனும் உயிரிழந்தனர்.
வட்டுக்கோட்டை - சங்கரத்தை - திக்கிராய் குளத்தின் அருகிலுள்ள கிணற்றிலேயே இருவரும் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தில் முல்லைத்தீவு விசுவமடு - ரெட்பானாவைச் சேர்ந்த தனுசன் டனுசன் (வயது 3) என்ற ஆண் குழந்தையும் அவரின் தாய் மாமனான வட்டுக்கோட்டை தெற்கைச் சேர்ந்த பெருமாள் மகிந்தன் என்பவருமே உயிரிழந்தனர்.
கிணற்றில் குழந்தை மிதப்பதை அவதானித்த அந்தப் பகுதியினர் குழந்தையை மீட்டு யாழ். போதனா மருத்துவமனையில் சேர்ப்பித்தனர்.
எனினும், குழந்தை உயிரிழந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தை விசாரித்த பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்று கிணற்றிலிருந்து குழந்தையின் தாய் மாமனை மீட்டுள்ளனர்.
அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்துவிட்டார் என்று கூறப்பட்டது.
இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
