ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே திருப்பதி ஏழுமலையான் பிரசாதம்.

4 months ago


இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில் திருப்பதி ஏழுமலையான் ஆலயமும் ஒன்றாகும்.

பக்தர்கள் அதிகளவில் செல்லும் இந்த ஆலயத்தில் பிரசாதம் பெற்றுக்கொள்ளும் பக்தர்களுக்கு புதிய நிபந்தனை ஒன்று விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பிரசாதம் பெற்றுக்கொள்ளும் பக்தர்கள் ஆதார் அட்டையைக் காண்பித்து உறுதிப்படுத்திய பின்னரே அவர்களுக்குப் பிரசாதம் வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

இடைத்தரகர்கள் மூலம் லட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.