6 பணயக் கைதிகள் படுகொலை, இஸ்ரேலில் பெரும் போராட்டம்! போர் நிறுத்தத்துக்கு வலியுறுத்தல்.

4 months ago


இஸ்ரேலிய தொழிற் சங்கங்களின் அழைப்பை ஏற்று வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால், வர்த்தக நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் அனைவரும். இஸ்ரேலிய அரசு விரைவாக ஹமாஸ் அமைப்புடன் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும் என்றும் எஞ்சிய பணயக் கைதிகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என் றும் வலியுறுத்தி வருகின்றனர்.

காஸாவில் ஆறு பணயக்கைதிகள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, எஞ்சியவர்களை மீட்க இஸ்ரேலிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அந்த நாட்டின் பல்வேறு நகரங்களில் பெரும் மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன. இதனால் நெதன்யாகு தலைமையி லான அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு ஒக்ரோபர் 7 ஆம் திகதி அன்று தாக்குதல் நடத்தி சுமார் 1,200 பேரைக் கொலை செய்தனர். சுமார். 250 பேரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். இந்தச் சம்பவத்தை அடுத்து, ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், பணயக் கை திகளில் 6 பேரை ஹமாஸ் அமைப்பினர் கொன்றனர். அவர் களின் உடல்களை இஸ்ரேலிய இராணுவம் மீட்டது. இதையடுத்து, இஸ்ரேலிய அரசுக்கு எதிராக அந்த நாட்டின் ஜெரு சலேம், டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களில் பெரும் போராட்டங்கள் நடைபெற்றன.

ஹமாஸ் உடன் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டி ருந்தால் பணயக் கைதிகள் உயி ரோடு வந்திருப்பார்கள் என்றும் இஸ்ரேலிய ஆட்சியாளர்களே இதற்கு பொறுப்பு என்றும் கூறி இலட்சக்கணக்கான இஸ்ரேலியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஜெருசலே மில், போராட்டக்காரர்கள் வீதிகளை மறித்து பிரதமரின் இல்லத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல் அவிவின் பிரதான நெடுஞ்சாலைகளில், கொல்லப்பட்ட பணயக்கைதிகளின் படங்களுடன் கொடிகளை ஏந்தியவாறு ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணயக்கைதிகளின் குடும் பங்களுக்கான அமைப்பு, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கடுமையாக கண்டித்துள்ளது. "பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டவர்கள் கடந்த 11 மாதங்களாக பல்வேறு துன்பங்களை அனுபவித்து வந்த நிலையில் தற்போது கொல்லப்பட்டனர். அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில் ஏற்பட்ட தாமதமே இதற்குக் காரணம்" என்று அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக 40 ஆயிரத்து 738 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களுக்கு போதிய தங்குமிட வசதிகள் இல்லாததாலும், உணவு போதிய அளவில் கிடைக்காததாலும் அவர்கள் கடும் நெருக்கடியுடன் இக்கட்டான சூழ்நிலையில் வாழ்வதாகவும் அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

அண்மைய பதிவுகள்