

கொழும்பு கோட்டைப் பகுதியில் உள்ள பழைய செயலகத்திற்கு அருகில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதாக கொழும்பு துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு துறைமுக நகர அதிவேக வீதியுடன் இணைக்கப்பட்ட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கைகளின் போதே 6 அடி ஆழத்தில் இந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கடந்த சனிக்கிழமை இந்த மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் இவை பல வருடங்கள் பழைமையானவை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அகழ்வு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதுடன், இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதிமன்றத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த இடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கொழும்பு துறைமுக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
