தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ராவுக்கு இந்திய மதிப்பில் ரூ.3,430 கோடி சொத்துகள் இருப்பதாக தெரிவிப்பு

1 day ago



தாய்லாந்து நாட்டின் பெண் பிரதமர் ஷினவத்ராவின் (Paetongtarn Shinawatra) சொத்து மதிப்பு 3500 கோடி இந்திய ரூபா என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து பிரதமர் நேற்று (03.01.2025) தனது சொத்து மதிப்பை அறிவித்துள்ளார்.

இச்சொத்து பட்டியலை தேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்திடம் அவர் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்து நாட்டின் பெண் பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா (38) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் பதவியை ஏற்றுள்ளார்.

இவர் முன்னாள் பிரதமரும், மிகப்பெரிய தொழில் அதிபருமான தக்சின் ஷினவத்ராவின் இளைய மகள் ஆவார்.

அதன்படி பேடோங்டர்ன் ஷினவத்ராவின் சொத்து மதிப்பு 3500 கோடி இந்திய ரூபா ஆகும்.

இதில் 17 கோடி இந்திய ரூபா மதிப்பில் 200 டிசைனர் பைகளும், 42 கோடி இந்திய ரூபா மதிப்பில் உயர் ரக கைக்கடிகாரங்களும் இடம்பெற்றுள்ளன.

அண்மைய பதிவுகள்