யாழ் மாநகர சபை தொழில் நுட்ப உத்தியோகத்தரின் திருகுதாளம் - கோப்பாய் சண்முகம். -- கதையோடு செய்தி
கோப்பாய் சண்முகம் -கதையோடு செய்தி-
யாழ்ப்பாணத்தில தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் (TO) இருக்கிறார்களா, இல்லையா? என்ற சந்தேகம் எழுவதற்கு காரணம் வெள்ளம் பாருங்கோ.
என்னடா கோப்பாய் சண்முகம் தொழில் நுட்ப உத்தியோகத்தருக்கும் வெள்ளத்துக்கும் சம்பந்தம் இருப்பதாக சொல்கிறாரோ என்று தானே பார்க்கிறியள், இருக்குது பாருங்கோ.....
யாழில் கட்டிடங்களுக்கு அனுமதி கொடுக்கிறார்களோ இல்லையோ வெள்ளம் நிற்காமல் ஓடுறதுக்கும் ஓடாமல் விடுவதற்கும் அனுமதி இருக்குமோ? என்று எண்ணத் தோன்றுகிறது என்று சனம் இவர்கள் மீது விசனம்.
யாழில் வெள்ள வாய்க்காலை மூடி கட்டிடங்களை கட்டும் போது சம்பந்தப்பட்ட இவர்கள் எங்கே பார்த்துக் கொண்டு இருந்தவர்கள். என்று கேட்க மாட்டோம், இப்ப புதிதாக வந்த ஆளுநர் சொல்ல வேண்டும். இவரும் முன்னர் நிர்வாகத்தில இருந்தவர்.
கட்டிடங்களை இடிக்கச் சொல்லி எத்தனை கட்டிடங்களை இடிக்க முடியும் முடியாத காரியம் என்று வாய்க்காலுக்கு மேலை கட்டிடத்தை கட்டினவை சொல்லுகினம்.
வந்த புதுசில இப்படித் தான், போகப் போக எதிர்வினையானவர்கள் என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை.
யாழில் வெள்ளம் வெள்ளம் என்று ஒவ்வொரு மழைக்கும் கத்துவதைத் தவிர மக்களுக்கும் வேறு வழி தெரியவில்லை.
செய்திக்கு வாறன், யாழ்.கொழும்புத்துறை சோமசுந்தரம் வீதியில் வசிப்பவர்களில் இரு குடும்பத்துக்கு தொண்டு பற்றி விளங்காத விடயம் தான் கவலை தரும் விடயம்.
அந்த வீதியில் 35 குடும்பம் வசிக்கிறது.7 குடும்பம் மட்டும் ஒவ்வொரு மழைக்கும் வெள்ளத்தில் மிதக்கிறது. இந்தக் குடும்பத்துக்கு வழியைக் காட்ட அந்த வீதியில் உள்ள இரு குடும்பங்கள் தடையாம்.
மாநகர சபையால் இந்த வீதிக்கு வெள்ள வாய்க்காலை கட்டுவதற்காக 92 இலட்சம் ரூபாயை ஒதுக்கி பல வருடங்கள் கடந்து விட்டன. இன்றும் இலுபறி நிலையில கிடக்குது.
என்ன பிரச்சினை என்றுதானே பார்க்கிறியள். தொழில் நுட்ப உத்தியோகத்தருக்கு வாய்க்கால் கட்டுவதற்கு எதிராக நிற்கும் இரு குடும்பங்களும் வேண்டப்பட்டவர்களாம். வாய்க்கால் கட்டாததிற்கு காரணம் வீதியில கார் விட வேண்டுமாம்.
இரு மாதத்துக்கு முன் வாய்க்காலை கட்டுவதற்காக கிடங்கு வெட்டப்பட்ட நிலையில் இரு குடும்பங்கள் மறுத்ததால் மூடப்பட்டதாம். இன்றும் விடிவில்லை. ஒதுக்கப்பட்ட நிதி திரும்புதோ தெரியலை.
இப்படித் தான் யாழ்.நகர் கட்டிடங்கள் வெள்ள வாய்க்காலை மூடி கட்டினத்துக்கு கண்டும் காணாமல் இருந்தது வேண்டப்பட்டவர்களோ.
எந்த விதத்தில் வேண்டப்பட்டவர்கள் அனுமதி எடுக்காமல் வாய்க்காலின் மேல் கட்டிடம் கட்டினத்துக்கு இவர்களும் விட்டார்களா? பார்த்துக் கொள்வோம் என்று அனுமதி எடுக்காமல் கட்டிடம் கட்டினவைக்கு பதில் வந்ததாம்.
கட்ட எடுத்த இந்த வாய்க்காலை கட்டாமல் நிறுத்தியதற்கும் பார்த்துக் கொள்கிறேன் என்று தொழில்நுட்ப உத்தியோகத்தர் சொன்னாரோ. இன்று இவர்களால் தான் பிரச்சினை பூதாகரமாக எழக் காரணம் என்று சனம் சொல்லுது.
எப்பத்தான் அரச சம்பளம் எடுக்கும் உங்கட வேலை செய்யப் போறியள்.