எயார் கனடா விமானிகள் வேலை நிறுத்தம் தவிர்க்கப்படலாம் என மத் திய தொழிலாளர் அமைச்சர் ஸ்டீவ் மெக்கின்னன் நம்பிக்கை தெரிவித்தார்.
வேலை நிறுத்தம் காரணமாக எயார் கனடா நிறுவனம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் விமான சேவைகளை இரத்து செய்யும் நிலை தோன்றியுள்ளது.
இந்த வேலை நிறுத்தம் ஆரம்பிக் கப்படுவதற்கு முன்னதாக அதனைப் பேச்சுகள் மூலம் தவிர்க்கலாம் என அமைச்சர் ஸ்டீவ் மெக்கின்னன் கூறினார்
சில 'குறிப்பிடத்தக்க சிக்கல்கள்' தீர்க்கப்படாமல் உள்ள போதிலும், இரு தரப்புக்கும் இடையேயான பேச்சுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
எயார் கனடா விமானிகள் வேலை நிறுத்தத்திற்கு முன்னதாக செயல்பாடுகளை இடைநிறுத்துவதற்கான திட்டங் களில் விமான நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் இருதரப்பு தீர்வு எட்டப்படாவிட்டால், 72 மணி நேர வேலை நிறுத்த முன்னறிவிப்பு வெளியாகலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.
72 மணி நேர வேலை நிறுத்த அறிவிப்பு காலம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் ஆரம்பிக்கும் நிலையில், வரும் புதன்கிழமை விமான சேவைகள் முழுமையாக நிறுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.