யாழ். மத்திய கல்லூரி அதிபர் நியமனத்தில் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் தலையீட்டை நீக்கவும்.-- எம்.பி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு

7 hours ago



யாழ். மத்திய கல்லூரி அதிபர் நியமனத்தில் டக்ளஸ் தேவானந்தாவால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் தலையீடு உடன் நீக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

பிரதமர் இப்போது கல்வி அமைச்சராகவும் இருக்கின்றார். அவர் எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்த போது, எனக்குப் பின்னால் அமர்ந்திருந்த அவர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி தொடர்பாக பிரச்சினை ஒன்றை எழுப்பியிருந்தார்.

இலங்கை அதிபர் சேவைக்கான தகுதியைப் பெற்றிருந்த ஒருவர் அப்பாடசாலைக்கு அதிபராக முறையாக நியமமிக்கப்பட்டிருந்த போதும் டக்ளஸின் அரசியல் தலையீடு காரணமாக அவரது நியமனம் இடைநிறுத்தப் பட்டதாகவும் மற்றும் தற்போது அதிபராக உள்ளவர் அப் பாடசாலையின் அதிபராக செயற்பட முடியாதவர் என்றும் அரசியல் தலையீடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

அவர் இப்போது கல்வி அமைச்சராக இருக்கிறார், ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகிவிட்டன.

இந்த நாட்டில் இந்த அரசாங்கத்தில் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த நபர்களில் ஒருவராகவும் இருக்கிறார்.

எனவே, இதுபோன்ற முறையற்ற செயற்பாடுகளை மாற்றியமைக்க வேண்டும்.

இறுதியாக, நீதியமைச்சர், அரசியல் கைதிகள் இல்லை என தெரிவித்திருந்தார்.

அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று யாழ்ப்பாண உரைகளில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

எனவே அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்-என்றார். 

அண்மைய பதிவுகள்