ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.

2 months ago



ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதன்போது யாழ். மாவட்ட செயலகத்தில் விசேட மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.

அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அங்கத்தவர்களுடனான சந்திப்பொன்றிலும் அவர் பங்கேற்கவுள்ளார் என தகவல்கள் கூறுகின்றன.

இதனை விடவும், தென்மராட்சியில் ஆலய நிகழ்வொன்றில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெறுகின்றன.

எனினும் இதற்கான உறுதிப்படுத்தல்கள் இன்னமும் செய்யப்படவில்லை.

ஜனாதிபதி அநுரகுமார பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்தார்.

இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்ததன் பின்னர் ஜனாதிபதி அநுரகுமாரவின் முதல் யாழ் விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.