இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை.-- அமைச்சர் இ.சந்திரசேகரன் தெரிவிப்பு

1 month ago



இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரைக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்ந்து பெரும் இழுபறியாக உள்ளது அதனால் எமது மீனவர்களே பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர்.

அரசாங்கம் எமது நாட்டு மீனவர்களை பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுக்கும்.

அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு நாம் ஒருபோதும் பின்னிற்கப் போவதில்லை.

அண்மைய பதிவுகள்