





வவுனியா பல்கலைக்கழகத்தின் இரண்டாவது துணைவேந்தராக பேராசிரியர் அருளம்பலம் அற்புதராஜா நேற்றுத் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
வவுனியா பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் உட்பட பல்கலைக்கழக கல்வி சார்
உத்தியோகத்தர்கள் புடைசூழல் மங்கள வாத்திய இசையோடு அழைத்துவரப்பட்ட புதிய துணைவேந்தர் அருளம்பலம் அற்புதராஜா ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட நியமனக் கடிதத்தைக் கையொப்பமிட்டு பெற்றுக் கொண்டி ருந்தார்.
வவுனியா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் நடராஜா ராஜவிசாகன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் எஸ்.மோகனதாஸ் பல்கலைக் கழகத்தின், முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் தம்பு மங்களேஸ்வரன் மற்றும் பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், கல்வி சார்ந்த ஊழியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
