12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் கும்பமேளா நிகழ்வானது இந்தியாவில் இன்று ஆரம்பம்

17 hours ago



இந்துக்களின் முக்கிய திருவிழாக்களில் மகா கும்பமேளாவும் ஒன்றாகும்.

12ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் கும்பமேளா நிகழ்வானது இந்தியாவில் இன்று ஆரம்பமாகியது.

உத்தரப் பிரதேச மாநிலமான பிரயாக்ராஜ், உத்தரகாண்ட் மாநிலமான அரித்வார், மத்தியப் பிரதேச மாநிலமான உஜ்ஜைன் மற்றும் மகாராஷ்டிர மாநிலமான நாசிக் ஆகிய 4 பிரதேசங்களில் உள்ள ஆற்றங்கரையில் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது.

அவற்றில், பிரயாக்ராஜ் மாநிலத்தில் நடைபெறும் கும்பமேளாவே மிகவும் புகழ்பெற்றதாக விளங்குகிறது

கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நடைபெறுவதால் இந்நிகழ்வு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

3 நதிகளும் சங்கமிக்கும் இடத்தை திரிவேணி சங்கமம் என்று அழைக்கிறார்கள்.

கும்பமேளா நடைபெறும் காலங்களில் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதை இந்துக்கள் மிகவும் புனிதமாகக்  கருதுகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து பக்தர்கள் மிகப்பெரிய அளவில் திரண்டு புனித நீராடி வருகிறார்கள்.

இந்த மகா கும்பமேளா நிகழ்வுகள் தொடர்ந்தும் 45 நாள்கள் கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

அண்மைய பதிவுகள்