3 பிள்ளைகள் கணவரை கைவிட்டு வேறொருவருடன் சென்ற 29 வயதான பெண் ஒருவரை சாவகச்சேரிப் பொலிஸாரால் கைது

4 months ago



பத்து வயதிற்கு உட்பட்ட மூன்று குழந்தைகளையும் கணவனையும் கைவிட்டு விட்டு வேறொரு ஆணுடன் சென்ற 29 வயதான பெண் ஒருவரை சாவகச்சேரிப் பொலிஸார் நேற்று புதன்கிழமை காலை கைது செய்துள்ளனர்.

நாவற்குழியைச் சேர்ந்த மேற்படி பெண் தனது 4 வயது, 6 வயது மற்றும் 10 வயதுடைய மூன்று பிள்ளைகளைை விட்டு விட்டு வேறொரு ஆணுடன் சென்றிருந்த நிலையில் பெண்ணுடைய கணவன் சாவகச்சேரிப் பொலிஸில் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்படி கைது நடவடிகையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

யாழ்.கீரிமலைப் பகுதியில் வசித்து வந்த நிலையிலேயே பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.