யாழ்.வடமராட்சி கிழக்கில் பொலிஸ், இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்.

யாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் பகுதியில் மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில், பொலிஸ், இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து நேற்று சுமார் இரண்டு மணிநேரம் தீவிர சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்.
இந்த சுற்றிவளைப்பு மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகிய இச்சுற்றிவளைப்பின்போது எவரும் கைது செய்யப்படவில்லை.
கசிப்பு உற்பத்தி மற்றும் அதனால் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக, அப்பகுதியில் நிலவும் பிரச்சினைகளை கட்டுப்படுத்தவே இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, மாளிகைத்திடல் பகுதியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்ததனால், இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதலில் இருவர் காயமடைந்ததுடன், இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
நேற்று காலை மேலும் இருவர் கசிப்புடன் மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையை கட்டுப்படுத்த இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
சுற்றிவளைப்பின்போது, அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், இராணுவத்தினர் அங்கு ஒளிப்பதிவையும் மேற்கொண்டனர்.
மேலும், அம்பன் கிழக்கு மற்றும் கொட்டோடை பகுதிகளிலும் கசிப்பு உற்பத்தி அதிகரித்துள்ளதால், அப்பகுதிகளிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
