
பிரதமர் ட்ரூடோவுக்கு சில மாதங்களில் இரண்டாவது இடைத்தேர்தல் தோல்வி!
அவரின் லிபரல் கட்சி வெற்றி எதையும் சில மாதங்களில் இரண்டாவது பெறவில்லை.
இடைத்தேர்தல் தோல்வியை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எதிர்கொண்டார்.
திங்கட்கிழமை நடைபெற்ற இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தற்போதைய சிறுபான்மை நாடாளுமன்றத்தில் அதிகார சமநிலையை வைத் திருக்கும் கட்சிகள் இந்த இடைத்தேர்தலில் தலா ஒரு ஆசனத்ததை வென்றன.
கியூபெக் மாகாணத்தின் லசால்- எமார்ட்-வெர்டுன் தொகுதியை நீண்ட காலமாக லிபரல் கட்சி பிரதிநிதித்துவப்படுத்தியது.
திங்கள் நடைபெற்ற இடைத் தேர்த லில் இந்தத் தொகுதியை புளொக் கியூபெக்குவா கட்சி வெற்றி பெற்றது.
இந்தத் தொகுதியின் இடைத்தேர்தல் பிரதமரின் தலைமைக்கான வாக்கெடுப்பாக நோக்கப்பட்டது.
அதேவேளை மனிடோபா மாகாணத் தின் எல்ம்வூட்-டிரான்ஸ்கோனா தொகுதியை புதிய ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றது.
இவற்றில் கியூபெக் மாகாணத்தின் லசால்-எமார்ட்-வெர்டுன் தொகுதி தோல்வி லிபரல் அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளது.
கோடை கால ஆரம்பத்தில் நடை பெற்ற மற்றொரு இடைத் தேர்தலில் லிபரல் கட்சியின் கோட்டையாக இருந்த சென்.போல்ஸ் தொகுதியை கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி பெற்றி ருந்தது.
இது ஜஸ்டின் ட்ரூடோ தலைமையி லான லிபரல் அரசாங்கத்திற்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
தற்போது இரண்டாவது கோட்டையாக கருதப்படும் கியூபெக் மாகாணத்தின் லசால்-எமார்ட்-வெர்டுன் தொகுதியை இழந்த பின்னர் ஜஸ்டின் ட்ரூடோ அமைச்சரவையை சந்திக்கிறார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
