உக்ரைன்- ரஷ்யா போரிற்கு தள்ளப்பட்ட வடக்கு உள்ளிட்ட இலங்கையர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.- வெளி விவகார அமைச்சு தெரிவிப்பு

1 month ago



ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல முற்பட்டு உக்ரைன் - ரஷ்யா போரில் பங்கேற்கும் நிலைக்குத்            தள்ளப்பட்டுள்ள வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்      உள்ளிட்ட இலங்கையர்கள் தொடர்பில் அவதானம்              செலுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

அவ்வாறு சென்றவர்கள் கூலிப் படையிலேயே இணைக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதேநேரம், இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள டியாகோ கார்சியா தீவில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நிர்க்கதிக்குள்ளாகியிருந்த புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா தெரிவித்தார்.