நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இழக்கின்ற ஆபத்து அண்மித்துள்ளது. யாழ்.மறைமாவட்ட குருக்கள் ஒன்றியம் தெரிவிப்பு
தூரநோக்கற்ற அரசியற் குழப்பங்களால் தமிழர்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இழந்துபோகக்கூடிய ஆபத்து அண்மித்துள்ள இவ்வேளையில் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்கால அரசியலுக்கான புதிய திசைகளைத் தீர்மானிக்க வேண்டும் என்று யாழ்ப்பாண மறைமாவட்ட குருக்கள் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பில் யாழ்ப்பாண மறைமாவட்ட குருக்கள் ஒன்றியம் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் உள்ளதாவது-
நாம் ஓர் இனமாக வரலாற்றுப் பெரும் பாய்ச்சல் ஒன்றை மேற்கொள்ள வேண்டிய தருணத்தில் நிற்கிறோம்.
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னணியில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல், தமிழ் மக்கள் மத்தியில் பெரு மாற்றத்துக்கான எதிர்பார்ப்புக்களைத் தூண்டியிருக்கின்றன.
சமகால அரசியற்கட்சிகளின் உடைவுப் போக்குகள், உட்கட்சிக் குழப்பங்கள் தீர்க்கமான அரசியல் தெளிவற்றதன்மை போன்ற பல காரணிகளால் தமிழ் மக்களிடையே குழப்பங்களும் மனவேதனையும் நீடிக்கின்றன.
இந்த நிலை தொடருமானால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான அளவு தமிழ் நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தக்க வைக்க முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
அநுர' எனும் அலையைத் தொடர்ந்து 'மாற்றம்' என்பது மந்திரச் சொல்லாக பலராலும் உச்சரிக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
எனவே இந்த வரலாற்றுத் திருப்புமுனையில் நின்று கொண்டு புதிய வியூகங்களை வகுக்க வேண்டியது எமது தார்மீக வரலாற்றுக் கடமையாக உள்ளது.
வரலாற்றுச் சறுக்கலை மீண்டும் ஒருமுறை நிகழவிடாது எமது அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்கால அரசியலுக்கான புதிய திசைகளைத் தீர்மானிக்க வேண்டும். எம்மிடையே இருக்கும் பிளவுகள், வேற்றுமைகள், சாதி, சமய, பிரதேசவாதங்களைத் தாண்டி நகரவேண்டிய இடத்தில் வரலாறு எம்மைத் தற்போது நிறுத்தியுள்ளது.
குறிப்பாக பாரம்பரிய அரசியல் பிரதிநிதிகள் புதிய அரசியல் போக்குக்கு இடம் விட்டு நகர்ந்து அர்ப்பணிப்புள்ள நேர்மையான ஊழலற்ற இளையோர்களை உள்வாங்கி வழிநடத்துவது பெரும் மாற்றம் ஒன்றிற்கான சிறந்த முன்மொழிவாக இருக்கும்.
கிராம மட்ட சமூக அமைப்புகளின் கருத்துகளை உள்வாங்கி வேட்பாளர்களைத் தெரிந்தெடுப்பது மிகச்சிறந்த நகர்வாக இருக்கும் என்பதுடன், பால் நிலை சமத்துவம், பெண் பிரதிநிதித்துவம் குறித்தும் கருத்தில் எடுக்கவேண்டியதும் அவசியமாகும்.
செல்திசை தெரியாது தடுமாறும் அவல நிலையில் உள்ள தமிழ் இனத்துக்குச் சரியான திசைகளைக் காட்டுவது எமது வரலாற்றுக் கடமையென்பதை உணர்ந்து கொள்ளுவோம்.
தூரநோக்கற்ற அரசியற் குழப்பங்களால் எமது நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இழந்து போகக் கூடிய ஆபத்து அண்மித்துள்ள இவ்வேளையில் ஊழலற்ற நேர்மையான அரசியல் போக்குக் குறித்து தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்பு புதிய மாற்றத்தை' வேண்டி நிற்கின்றது.
நேர்மையான அரசியல் தெளிவுமிக்க ஒரு புதிய அரசியல் நகர்வை மேற்கொண்டு ஒரு தேசிய இனமாக எழுந்து நின்றால் மட்டுமே தமிழினம் தன் இருப்பின் உரிமைகளுக்கான பேரம் பேசும் சக்தியாக எழுந்து நிற்க முடியும் - என்றுள்ளது.
தேசிய
சி.சிறீதரன் நேற்று நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன்போது. புதிய ஜனாதிபதிக்கு சிறீதரன் வாழ்த்துத் தெரிவித்ததோடு, கடிதம் ஒன்றையும் கையளித்துள்ளார், அந்தக் கடிதத்திலேயே சிறீதரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்தக் கடிதத்தில் மேலும் உள்ளதாவது:- தங்களின் ஆட்சி, அதிகாரங்களின் மீது இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் கொண்டுள்ள எதிர்பார்ப்பைப் போலவே, இலங்கைத் தீவின் சுதேசிய இனத்தவர் களான தமிழர்களும், தமது அடிப்படை உரித்துகள் மீதான சாதக நகர்வுகள் தங்கள் ஆட்சிக்காலத்திலேனும் ஈடேறும் என்ற எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள் என்ற செய்தியை, அந்த மக்களின் பிரதி நிதியாக தங்களிடத்தே பதிவுசெய்ய
விரும்புகிறேன். கடந்த ஏழரை தசாப்த காலமாக இந்த நாட்டில், ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ள நர்ந்த இனவன்முறைப் பாதிப்புகள். வற்றுக்கு நீதிகோரி மூன்று தசாப்தங்
களாக நிகழ்ந்தேறிய போரின் விளைவு கள். போர் மௌனிக்கப்பட்ட பின்னரும் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் வலிந்து மேற்கொள்ளப்படும் கட்டமைக் ப்பட்ட இன, மத, மொழி மற்றும் கலா ரப் படுகொலைகள், கைதுகள், காணாமலாக்கல்கள் உள்ளிட்ட துயரச் சம்பவங்கள் தினம்தினம் அரங்கேற்றப் பட்டு வருவதை அறிந்திருப்பதைப் போலவே, தங்கள் ஆட்சியில் அத்த கைய துயர வரலாறுகள் இடம்பெறாதி ருக்கும் என்ற எமது மக்களின் ஏகோ பித்த நம்பிக்கையையும் தாங்கள் கரிச னையோடு அணுகுவீர்கள் என எதிர் பார்க்கிறேன்.
அந்தவகையில், வலிந்து காணாமலாக் கப்பட்டவர்களுக்கான சர்வதேச நீதி, மீள நிகழாமையை உறுதிசெய்தல், தமிழரசி யற்கைதிகளின் விடுதலை, மதத்தின் பெயரால் நடைபெறும் நிலப்பறிப்புகள் உள்ளிட்ட விடயங்களில் தங்களின் துரி தமானதும், சாதகமானதுமான நகர்வுக ளையும், நடவடிக்கைகளையும் கோரி நிற்கிறேன். சமநேரத்தில், போர்க்காலச் சூழலில்
இனத்திற்காகப் போராடி மடிந்த தமது புதல்வர்களை நினைவேந்தும் உரிமை கூட மறுக்கப்பட்ட இந்தத் தேசத்தில், போரியல் இயக்கம் ஒன்றின் வழிவந்த ஒருவராக எமது மக்களின் அக உணர் வுகளையும், அதிலுள்ள நியாயாதிக்கங் களையும் உணர்ந்து செயற்படும் மக் கள் தலைவராக, நாட்டின் நல்லிணக்கத் திற்கு துளியேனும் பாதிப்பை ஏற்படுத் தாத, உணர்வுநிலைப்பட்ட நினைவேந் தல்களை மேற்கொள்வதற்கு, எமது மக்களுக்கு இருக்கும் அடிப்படைஉரித்தை உறுதிசெய்ய வேண்டுமென்றும் தங்க ளைத் தயவோடு கோரிநிற்கிறேன்.
அதற்கமைய, ஈழத்தமிழர்களின் அடிப்
படை எதிர்பார்ப்புகளையும், அபிலாஷை
களையும் உணர்ந்தும், ஏற்றும் செயற் படத்தக்க அரசியற் கூருணர்வும், சகோ தரத்துவமும் மிக்க தங்களின் ஆட்சிக்கா லம், இலங்கைத் தீவின் துயர வரலாறு களை மீள நிகழ்த்தாத காலமாக, தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு நோக்கிய வரலாற்றின் திருப்பங்கள் நிக ழும் காலமாக அமையவேண்டுமெனக் கோருவதோடு, அத்தகைய நகர்வுகள் சார்ந்த தங்களின் பயணத்தில் எமது பரி பூரண ஒத்துழைப்பு உங்களோடு இருக்
கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கி றேன் - என்றுள்ளது. (அ-ஒ -26-20)