மேல் மாகாணத்தில் பதிவான ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் வடக்கு மாகாணத்திலும் பதிவாகியுள்ளது.-- சுகாதார பணிப்பாளர் தெரிவிப்பு
5 months ago

மேல் மாகாணத்தில் பதிவான ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் வடக்கு மாகாணத்திலும் பதிவாகியுள்ளதாக மேல்மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள பணிப்பாளர் கே.கே.சரத் தெரிவித்தார்.
பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் இறப்பு விகிதம் மிக அதிகமாக இருக்கின்றன என்றும் இந்த நோயைக் கட்டுப்படுத்த மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேல் மாகாணத்தில் 4 பண்ணைகளில் மேற்படி ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் பதிவாகியுள்ளது. அத்துடன் இது, வடக்கு, ஊவா, வடமேல் மாகாணங்களிலும் பதிவாகியுள்ளது.
கடந்த வார தரவுகளின்படி, மேல் மாகாணத்தில் சுமார் 70 ஆயிரம் பன்றிகள் உள்ளன. இவற்றில் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை இந்த நோயால் இறந்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
