ஏறாவூரில் கொள்ளையடிக்க வந்த குழுவால் கடை உரிமையாளர் படுகொலை.

5 months ago


போதைப் பொருளுக்கு அடிமையான கும்பலைச் சேர்ந்த வர்கள் கடையில் கொள்ளையடிக்க முற்பட்டபோது அத னைத் தடுத்த கடை உரிமையாளர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிச்நகர் - ஹிஸ்புல்லாஹ் நகரில் வர்த்தகர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் செவ் வாய்க்கிழமை அவரது வர்த்தக நிலையத்தில் வைத்து இந்தக் கொலைச் சம்பவம் இடம் பெற்றது.

போதைப்பொருள் பாவனை யாளர்கள், வர்த்தக நிலையத்தை கொள்ளையடிக்க வந்த நிலையில் அதனை கடை உரிமையாளர் தடுத்த போது கொலை இடம்பெற்றதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்தது. இந்தச் சம்பவத்தில் சில்லறைக் கடை நடத்தி வந்த 45 வயதுடையவரே தலைப் பகுதியில் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

அண்மைய பதிவுகள்