
யாழ்.சாவகச்சேரி வைத்தியசாலையில் நீண்டகாலமாக பல பிரச்சினைகள் இருந்துள்ளன என்று கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அர்ச்சுனா மீண்டும் அந்த ஆஸ்பத்திரியில் வந்து பணியாற்றும் நிலைமை வரும் என்றும் நம்பிக்கை வெளியிட் டிருக்கின்றார்.
ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியி லேயே அவர் இந்த விடயங்களைக் கூறி இருக்கின்றார்.
அங்கு மூன்று மாடிக் கட்டடம் ஒன்றும் இருந்தும் கூட 14 வருடங்கள் சரிவர அந்த வளங்கள் பயன்படுத்தப்படாமல் இருந்துள்ளன.
இந்த நிலையில், வைத்தியர் இராம நாதன் அர்ச்சுனாவின் ஊடாக இவை வெளிக்கொண்டு வரப்பட்டபோது பொது மக்கள் தங்களது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றனர் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சாவகச்சேரி வைத்தியசாலையில் நடைபெற்றவை தொடர்பில் தான் அமைச்சரவைக்குச் சமர்ப்பித்த விடயங்கள் அமைச்சரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்விடயங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு உயர்மட்டக் குழு ஒன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்திருப்பதாகவும் சொன்னார்.
மேலும், அந்த விசாரணைகள் முடிந்து வைத்தியர் அர்ச்சுனா மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலையில் கடமையை பொறுப்பேற்பார் என்று தாம் நம்புகின்றார் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெளிவுபடுத்தினார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
