கனடாவில் தமிழர் ஒருவர் ஒரு மில்லியன் டொலர் அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.
3 months ago
கனடாவில் தமிழர் ஒருவர் ஒரு மில்லியன் டொலர் அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.
பிறம்டன் நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் ராஜரத்தினம் என்பவர் அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் இந்தப் பரிசு தொகையை வெற்றி பெற்றார்.
என்கோர் வெற்றியாளரான இவர், இந்தப் பரிசு தொகையின் மூலம் தனது வீட்டின் அடமானக் கடனைச் செலுத்தி முடிக்க முடிவு செய்துள்ளார்.
எட்டோபிகொக் நகரில் உள்ள வூட்பைன் ரேஸ்டிரக்கில் அவர் தனதுவெற்றிச் சீட்டைக் கொள்வனவு செய்துள்ளார்.
20 ஆண்டுகளுக்கு மேலாக அதிர்ஷ் டலாப சீட்டுகளை கொள்வனவு செய்து வரும் இவர் ஓகஸ்ட் 14ஆம் திகதி லொட்டோ 6-49 சீட்டிழுப்பில் இந்த வெற்றியைப் பெற்றார்.