இலங்கை மீனவர்கள் 05 பேருடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகு சர்வதேச கடற்பரப்பில் விபத்து.-கடற்படை தெரிவிப்பு

3 months ago


இலங்கை மீனவர்கள் 05 பேருடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகொன்று சர்வதேச கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகியிருப்பதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த 05 இலங்கை மீனவர்களும் மிரிஸ்ஸ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து "ரன்முத்துவ 10" எனும் மீன்பிடிப் படகில் கடந்த 12 ஆம் திகதி மீன்பிடிக்கச் சென்றதாகவும் அந்த படகு கடந்த 26ஆம் திகதி விபத்துக்கு உள்ளானதானதாகவும்          தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துக்குள்ளான படகு தற்போது இந்திய கடற்பரப்பில் மிதந்து கொண்டு இருப்பதாக படகின் உரிமையாளருக்கு மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான படகில் இருக்கும் மீனவர்களுக்கு உதவு வதற்காக மற்றுமொரு படகை அனுப்பியுள்ளதாக படகின் உரி மையாளர் தெரிவித்துள்ளார்.



அண்மைய பதிவுகள்