கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் பாடசாலைகளில் வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு.

3 months ago


கனடாவின் ஒன்றாரியோ மாகா ணத்தில் பாடசாலைகளில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகின்றது.

ஒன்றாரியோ மாகாண கல்வி பணியாளர்களும் எதிர்க்கட்சியான என்.டி.பி கட்சியும் இது தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

பாடசாலைகளில் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒன்றாரியோ ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஒன்றியத்தைச் சேர்ந்த 77 வீதமான கல்விப் பணியாளார்கள் வன்முறைகளை சந்தித்தோ அல்லது வன்முறைகளை பார்வையிட்டோ உள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு இவ்வாறான சம்பவங்கள் அதிகளவில் இடம் பெற்றுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த எட்டு ஆண்டுகளாக பாட சாலைகளில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

பல்வேறு வழிகளில் துன்புறுத்துதல் போன்ற சம்பவங்கள் அதிக அள வில் இடம்பெற்று வருகின்றனவாம்.

உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப் படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆசிரியர்களும் பள்ளிக்கூட பணி யாளர்களும் இந்த சம்பவங்களினால் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.