யாழ். மாவட்டத்தில் சுமார் 3575.81 ஏக்கர் நிலம் இராணுவத்தினரின் பயன்பாட்டில், அதில் 2624.29 ஏக்கர் நிலம் தனியாருடையது

யாழ். மாவட்டத்தில் சுமார் 3575.81 ஏக்கர் நிலம் பாதுகாப்பு தரப்பினரின் பயன்பாட்டில் உள்ள நிலையில் அதில் 2624.29 ஏக்கர் நிலம் தனியாருக்கு சொந்தமானவையாகும்.
ஜனாதிபதி தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வருடம் 2025 தை மாதம் 31 ஆம் திகதி வரையான புள்ளி விபரங்களின் அடிப்படையில் மாவட்டத்தில் இராணுவத்தினரின் பிடியில் 1775.27 ஏக்கர் தனியார் நிலமும், விமானப்படையின் பிடியில் 660.05 ஏக்கர் தனியார் நிலமும், கடற்படையினரின் பிடியில் 160.67 ஏக்கர் தனியார் நிலமும், பொலிஸாரின் பிடியில் 28.28 ஏக்கர் தனியார் நிலமும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இராணுவத்தினரிடம் 411.66 ஏக்கர் அரச நிலமும், விமானப்படையினரிடம் 349.82 ஏக்கர் நிலமும், கடற்படையினரிடம் 179.70 ஏக்கர் நிலமும், பொலிஸாரிடம் 10.34 ஏக்கர் நிலமுமாக 951.52 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட த்தில் மொத்தமாக 3575.81 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
