வவுனியாவில் பல விவசாயிகளுக்கு உரத்துக்கான கொடுப்பனவு வழங்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டு

வவுனியாவில் பல விவசாயிகளுக்கு இதுவரை உரத்துக்கான கொடுப்பனவு வழங்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட வவுனியா மாவட்டத்தில் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற உரத்துக்கான கொடுப்பனவு இதுவரை வழங்கப்படாமையால் விவசாயிகள் தொடர்ந்தும் கடன்பெற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெற் செய்கை ஆரம்பிக்கப்பட்ட கால பகுதியில் விவசாயிகளால் உரத்துக்கான பதிவுகள் அனைத்தும் கமக்கார அமைப்புகளின் ஊடாக பதிவு செய்யப்பட்டிருந்தது.
எனினும், வவுனியாவில் உள்ள பல விவசாயிகளுக்கு இதுவரை கொடுப்பனவு கிடைக்கப்பெறாத நிலைமை காணப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கம் இம்முறை உரக் கொடுப்பனவாக ஹெக்டேயருக்கு 15,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாக கொடுப்பனவை உயர்த்தியிருந்த போதிலும் கூட உரத்தை கொள்வனவு செய்வதற்கு விவசாயிகள் தொடர்ந்தும் கடன் பெறவேண்டிய இக்கட்டான சூழலில் காணப்படுவதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
