
யாழ்ப்பாணத்தில் 30 கிலோ ஆமை ஒன்றுடனும் 20 கிலோ ஆமை இறைச்சியுடனும் நபர் ஒருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநகர் இறால் வளர்ப்பு திட்டம் பகுதியில் கடலில் இருந்து பிடித்து வரும் ஆமைகளை பாதுகாத்து, அவற்றை இறைச்சியாக்கி விற்கப்படுவதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் உயிருடன் ஆமை ஒன்றினை மீட்டுள்ளனர்.
அத்துடன் 20 கிலோ ஆமை இறைச்சியையும் மீட்டுள்ளனர்.
அதனை அடுத்து அங்கிருந்த 57 வயதுடைய நபரை கைது செய்து யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
