2024 இல் வடக்கில் மட்டும் ஊழல் மோசடி உட்பட பல குற்றச்சாட்டுக்களாலும் 28 பொலிஸார் பணிநிறுத்தம்

3 hours ago



இலங்கை வடமாகாணத்தில் கடந்த வருடத்தில் மட்டும் ஊழல் மோசடியாலும், இன்னும் பல குற்றச்சாட்டுக்களாலும் 28 பொலிஸார் பணிநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம், 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி வரையான காலப்பகுதியிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார்.